கார் விபத்தை தொழிலாக மாற்றிய பெண்

கார் விபத்தை தொழிலாக மாற்றிய பெண்:

வியன்னா நகரத்தின் மார்ட்டின் என்ற பெண் 2012 ஆம் ஆண்டு கார் விபத்தை சந்திக்க நேரிட்டது. விபத்திலிருந்து விரைவில் முழுமையாக வெளிவந்த போதிலும், மார்ட்டின் முதுகு வலி யாலும் முழுநேரம் உட்கார முடியாமலும் அவதிப்பட்டால்.

கார் விபத்தை தொழிலாக மாற்றிய பெண்:

 

 

அந்த சமயம் அவள் நின்று வேலை பார்க்கக் கூடிய மேசையைத் தேடினாள். அந்த சமயம் அது இருந்தபோதிலும் அதன் விலை மிக அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் அவள் நாம் ஏன் ஒரு குறைந்த விலையுள்ள மேசையை உருவாக்கக் கூடாது என்று யோசித்து அதற்கான வேளையிலும் இறங்கினாள். கூடிய விரைவில் அவளால் வெறும் 30 டாலர் விலை கொண்ட மேசையை உருவாக்க முடிந்தது.

அதனை அமேசான் டாட் காம்(amazon.com) இணையதளத்தில் விற்க ஆரம்பித்தாள். மார்ட்டின் உருவாக்கிய நின்று வேலை செய்ய உதவும் மேசை குறைந்த விலையிலும் நல்ல தரத்திலும் இருந்ததால் அவளால் நல்ல லாபம் பார்க்க முடிந்தது.

கார் விபத்தை தொழிலாக மாற்றிய பெண்:

அதன் தொடர்ச்சியாக அட்வான்ஸ்டு மேசையை உருவாக்கத் தொடங்கி அவளுடைய வியாபார திட்டங்களை பெருக்கினாள்.

தற்போது மார்ட்டின் 6 வேலையாட்கள் உதவியுடன் தொடர்ந்து தரமான விலை குறைவான மேசையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாள்.

Tamilhands:
சோதனை என்பது அனைவருக்குமே வரக்கூடிய ஒன்று. அதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் நம்முடைய வெற்றி உள்ளது.
உங்களின் சோதனைகளை சாதனைகளாகும் நேரம் வந்துவிட்டது.
நம்மை கனவு காண வைத்த அப்துல்கலாம் ஐயா அவர்களின் வழியில் தொடர்ந்து வெற்றி பெற முயற்சிப்போம்.

Facebook Comments