இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்

இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்:

இந்தக் கட்டுரை வெற்றிபெற்ற அனைவர்களின் ஒற்றுமையை நன்கு ஆராய்ந்து முடிவாக இந்த கட்டுரையில் நாம் பேசவிருக்கும் 3 விஷயங்களை கீழ் காண்போம்.

இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்

 

 

வெற்றி பெற்ற அனைவருக்கும் கீழ் கண்ட மூன்றில் ஏதேனும் ஒன்று இருக்கும்.

அதிக ஆர்வம் (கனவு):

அதிக ஆர்வம் உள்ள ஒருவன் அவனுடைய வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமாயின் அவனிடம் எதுவுமே இல்லாவிட்டாலும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் கூட போதும். தற்போது பல வெற்றிகளைக் கடந்த பல நபர்கள் ஆரம்ப காலத்தில் என்ன செய்வது என்று கூட தெரியாமல் தான் இருந்தார்கள். ஆனால் அவர்களிடம் அவ்வபோது இருந்தது அதிக ஆர்வம் மட்டுமே.

அதிக ஆர்வம் உள்ள ஒருவருக்கு வாழ்வில் ஏற்படும் அனைத்து சோதனைகளையும் வெற்றிக்கான படிகளாக மாற்றும் பக்குவம் இருக்கும்.

நீங்கள் உங்களை நன்கு ஆராய்ந்து உங்களுக்கு எந்த எந்த விஷயங்களில் அதிகம் ஆர்வம்  உள்ளது என்பதை கண்டறியுங்கள். அந்த விஷயங்களை நீங்கள் காசு நேரம் பற்றி யோசிக்காமல் செய்யும் விசயமாக இருக்கும்.

முதலில் நீங்கள் அந்த மாதிரியான அதிக ஆர்வமுள்ள விஷயங்களை ஒரு காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள். அந்த விஷயங்களில் எவைகளை எல்லாம் பணம் சம்பாதிக்க உபயோகிக்கலாம் என்பதை வரிசைப்படுத்துங்கள்.

வரிசைப்படுத்தியவைகளில் உங்களின் தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்த ஒன்றைப் தேர்வு செய்து அதில் முயலுங்கள்.

பலம்:

இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்

அனைவரிடமும் ஒரு பலம் உள்ளது. சிலரால் அதை எளிதாக கண்டறிய முடியும். சிலரால் பல இடர்பாடுகளுக்கு பின்னரே அவர்களின் பலத்தை கண்டறிய முடியும். இன்னும் சிலரால் அதைக் கண்டறியவே முடியாது.

நீங்கள் உங்களின் பலத்தை ஏற்கனவே கண்டறிந்திருந்தால் நீங்கள் ஏறக்குறைய பாதி வெற்றியை நெருங்கி விட்டீர்கள் என்று தான் அர்த்தம். ஆனால் நீங்கள் தற்போது உங்கள் பலம் சம்பந்தமான விஷயங்களில் தான் உழைத்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதி கொள்ளுங்கள்.

ஒருவன் நன்றாக ஓவியம் வரைவான் என்றால் அவன் சில பயிற்சிகளின் மூலம் உலகின் மிகச்சிறந்த ஓவியர்களில் ஒருவனாக முடியும். அதேநேரம் அவன் ஒரு பேச்சாளராக பணியாற்றுகிறான் என்றாள் அவன் மிகச் சிறந்த இடத்தை அடைவது மிகக் கடினமான ஒன்றாகும். காரணம் அவன் அவனுடைய பலத்திற்கு அப்பாற்பட்ட விசயத்தில் இருக்கிறான்.

திறமை:

இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்

ஒருவன் அவனுக்கு விருப்பமான ஒன்றில் அதிகமான கவனத்தை செலுத்தி அவனுடைய திறமையை வளர்த்துக் கொண்டான். இங்கு அவனுக்கு உண்மையிலேயே இந்த விஷயம் பலமாக இல்லாவிட்டாலும் அவன் அவனுடைய முயற்சியால் இந்த திறமையை வளர்த்துக் கொண்டான்.

எளிதாக புரிந்துகொள்ள, மேலே கண்ட மாதிரி ஒரு பேச்சாளருக்கு ஓவியத்தின் மீது அதிக விருப்பம் என்று வைத்துக்கொள்ளலாம். அவனுக்கு எளிதாக ஓவியம் வரையும் பலம்இல்லாவிட்டாலும் அவன் தொடர்ந்து முயற்சி செய்யும்போது அவனுக்கு அந்த ஓவியம் பழகிவிடும்.

நீங்கள் இன்றே உங்களை ஆராய்ந்து உங்களிடம் அதிக ஆர்வம், பலம், திறமை இவை மூன்றில் எவை உள்ளது என்று யோசித்து உங்கள் வெற்றி பயணத்தை தொடங்குங்கள் அல்லது தொடருங்கள்.

அதிக ஆர்வம், பலம், திறமை : இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்.

 

 

Facebook Comments