இந்தியாவில் தொழில் நேற்று இன்று நாளை

இந்தியாவில் தொழில் நேற்று இன்று நாளை:

இந்தியா உலகத்தின் புதிய தொழில் தொடங்க பவர்களுக்கும் அதிகமான முதலீடு செய்யப் பட்ட நாடுகளின் வரிசையிலு மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் தொழில் நேற்று இன்று நாளை

சமீபகாலத்தில் மட்டும் 60,000 லட்சம் கோடிக்கு மேல் இந்தியாவில் புதிய தொழில்களுக்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் அவரவர்களின் தொழில் ஆர்வம், புதிய கண்டுபிடிப்புகள், புதிய யுக்திகள்  போன்றவற்றால் புதிய புதிய தொழில்களை தொடங்க வண்ணம் உள்ளனர்.

 

இந்தியாவில் தொழில் நேற்று இன்று நாளை:

முதன்முதலில் இந்தியாவில் உள்ளூர் நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிப்பதில் தொடங்கி, பின் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 1990களில் டாட் காம் புரட்சி ஏற்பட்டு சில காலம் அது தொடர்ந்தது.

பிறகு 2007ஆம் ஆண்டுகளில் பொருள்களை ஆன்லைனில் வாங்குதல் ,விளம்பரம், தளவாடங்கள்(Logistics) ஆகியவை தொடங்கியது.

இவை அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை, இவைகள் எண்ணியல்(digital) சார்ந்தவைகளாக உள்ளது என்பது தான்.

 

புதிதாக யோசியுங்கள் நகல்கள் வேண்டாம்:

இந்தியாவில் தொழில் நேற்று இன்று நாளை

புதிதாக தொடங்கப்பட்ட ladyblush, donebynone போன்றவை ஏற்கனவே உருவாக்கப்பட்ட தொழில்களின் நகல்களாக(copy-cat) இருந்ததால் இந்த நிறுவனங்களால் சந்தையில் நிற்க முடியாமல் போனது.

மறுபுறம்  byju போன்ற நிறுவனங்கள் இணையத்தளம் மற்றும் ஆப் மூலம் மட்டும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து சில பயிற்சி வகுப்புகளையும் உருவாக்கியது, இவர்களுக்கு மார்க் சூக்கர்பர்க்(Facebook owner Mark Zuckerberg)-ம் ஒரு முக்கியமான முதலீட்டாளர்.

 

புதிய யுக்தி மிக அவசியம்:

இந்தியாவில் தொழில் நேற்று இன்று நாளை

2013ஆம் ஆண்டு இந்தியாவில் நுழைந்த அமேசான் அவர்களின் புதிய புதிய அணுகுமுறையின் மூலம் அவர்களின் வாடிக்கையாளர்களை மற்ற போட்டியாளர்களிடம் இருந்து கைவசப்படுத்த முடிந்தது.

ஒவ்வொரு நிறுவனமும் அவரவர்கள் இருக்கும் துறையில் முன்னணியாக திகழ வேண்டுமெனில் தொடர்ந்து, புதிய புதிய அணுகுமுறைகளை சரியான முறையில் சந்தைப்படுத்தியும் அவர்களின் வாடிக்கையாளர்களிடம் சேர்த்தால் மட்டுமே நிச்சயம் நல்ல முடியும்.

Facebook Comments