தனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா?

தனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா?:

தனி ஒருவனாக நீங்கள் தொழில் தொடங்கும்போது உங்களுக்கு நிறைய மணி நேரம் செலவு ஆகும், ஆனால் அதற்கேற்ற பணம் கிடைப்பதில் சந்தேகம் அல்லது இல்லை. அதில் நேரத்தில் நீங்கள் ஒரு ஐந்து பேரையாவது வேலைக்கு வைத்து அவர்களை மேல் பார்வையிடுவதால் உங்களுக்கு நல்ல பணம் கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.

 

தனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா?

 

ஒரு கணக்கு போடுவோம் :

ஒரு உதாரணத்துக்கு நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் சம்பாதிக்க இன்று வைத்துக்கொள்வோம்.
இதனை 200*8*5*54 = 4,32,000/-.
( 200 ரூபாய்* 8 மணிநேரம்* ஐந்து நாட்கள்* 54 வாரங்கள்), அதிகபட்சமாக 5 லட்சம் ஒரு வருடத்திற்கு சம்பாதிக்க முடியும்.

உங்களுக்கு தெரிந்த வேலை ஒரு மணி நேரத்திற்கு Rs. 500/- கிடைக்கும் என்று வைத்துக்கொண்டால்கூட அதிகபட்சமாக 11 லட்சம் சம்பாதிக்க முடியும்.

இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்

தற்போது நீங்கள் வேறு ஏதாவது ஒரு வேலையில் இருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொண்டால் உங்களுடைய நேரத்தில் பாதி நேரத்திற்கு மேல் உங்களுடைய தற்போதைய வேலைக்கு செலவிட வேண்டியிருக்கும். ஆக அந்த நேரத்தில் உங்களால் 5 லட்சம் சம்பாதிப்பது என்பது பெரிய விஷயமாகிவிடும்.

5 லட்சம் என்பதுகூட நல்ல தொகை தான் என்றாலும், உங்களுக்கு ஆகும் செலவு, வாடகை, வரி, மின்சாரம், இதர செலவுகள் என அனைத்தையும் கழிக்கும்போது உங்களால் அதிகப்பட்சமாக வருடத்திற்கு 2 லட்சம் பார்க்க முடியும்.

இந்த கணக்கில் நீங்கள் முதல் நாள் தொடங்கி கடைசி நாள்வரை தொடர்ந்து உழைத்தால் மட்டுமே இரண்டு லட்சமாவது பார்க்க முடியும், இல்லையெனில் ஒரு லட்சம் மட்டுமே உங்கள் ஒரு வருட உழைப்பின் பலன்.

ஒரு சரியான தொழில் அதிபர், வருடத்திற்கு ஒரு லட்சம் தான் சம்பாதிப்பான்?

இல்லை, அப்படியாயின் அவன் சிறந்த தொழிலதிபர் அல்ல.

அப்போது சிறந்த தொழிலதிபர் என்ன செய்வான்?

அவன் தனக்கு கீழே ஒரு 5 பேரையாவது வேலைக்கு அமர்த்தி ஒரு நல்ல தொகையை பார்க்க திட்டமிடுவான். இதன்மூலம் அவனுக்கு நிறைய நேரம்கூட மிச்சமாகும்.

இந்த யுக்தி புரிந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்

அதிகமான நேரத்தைச் செலவிட்டு தனியாக குறைவாக சம்பாதிப்பதைவிட, சில நபர்களின் உதவியோடு குறைந்த நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிடுவதே நல்ல பலனை கொடுக்கும்.

 

தனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா?

 

நீங்கள் ஒரு தனிநபர் தொழிலை தொடங்கினாள், நீங்களே விற்பனையாளர், நீங்களே கணக்காளர், நீங்களே பொருள் உற்பத்தியாளர், நீங்களே நிர்வாக அதிகாரி etc.

அதேசமயம் நீங்கள் சிலருடன் இணைந்து தொழில் செய்யும்போது உங்களின் சக்தியாக நினைப்பதை மட்டுமே நீங்கள் செய்தால் போதும்.

நீங்கள் ஒரு தொழிலை தனியாக தொடங்குவதா அல்லது குழுவாகத் தொடங்குவதா என்று யோசிக்கும் போதெல்லாம் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்,

எல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்

தனியாக,  முழு நேரமும் செலவிட்டு அனைத்து வேலைகளையும், தலையில் போட்டுக்கொண்டு சம்பாதிக்கும் பணத்தைவிட,  குழுவாக தொடங்கி உங்களுக்குப் பிடித்த அல்லது சக்தியாக நினைப்பதை மட்டும் குறைந்த நேரத்தில் முடித்துக் கொடுத்து பணம் சம்பாதிப்பது சிறந்த முறையாகும்.

( இங்கே சிறந்த முறையை ஆராய்கிறோமே தவிர, உங்களின் விருப்பத்திற்கேற்றவாறு, உங்கள் தொழிலை தொடங்கலாம்).

 

தொழில் தொடங்குவதற்கு உதவும் புத்தகங்கள்:

GoalsEntrepreneur 5pm to 9am$100 Startup

 

 

 

Facebook Comments