வில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்

“வீழ்வேனென்று நினைத்தாயோ”, “அச்சமில்லை அச்சமில்லை”:

பலர் தமிழை வளர்ப்போம்! வளர்ப்போம்! எனப் பேச்சில் வளர்க்க, அதற்கு மாற்றாக ஒரு சிறு முயற்சியில் தொடங்கி இன்று ஒரு பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது வில்வா தமிழ் ஆடைகள்.

புரட்சி கவிஞரின் வரிகளான “வீழ்வேனென்று நினைத்தாயோ”, “அச்சமில்லை அச்சமில்லை” போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு தொடங்கிய இவர்களின் தமிழ் ஆடை நிறுவனம் இன்று தமிழரின் பாரம்பரியம், பெருமைகளை பறைசாற்றும் அடையாளங்களை(இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், கட்டிட கலை உச்சத்தின் சாட்சியான தஞ்சை பெரிய கோவில் ஆவணப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழரின் போர்க்களைகளான சிலம்பம், களரி, வர்மக்கலை போன்றவையை ஒருங்கிணைக்கும் பணியில் உள்ளனர்.


ஏன் தமிழை ஆடைகளில் பொறித்து விற்பனை செய்கின்றனர் எனக் கேட்டால், “எத்தனையோ பேர் அர்த்தமே அறியாமல் ஆங்கிலத்தில் கொச்சையாக” உள்ள பல வடிவங்களைத் தன் நெஞ்சில் சுமக்கும் போது,

“கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடியான”:

நம் தமிழை ஏன் சுமக்கக்கூடாது, நன்கு அறிந்த தமிழே என்றாலும் அனைத்து வடிவங்களும் ஒரு முறைக்கு இருமுறை சரிப்பார்க்கப்பட்ட பின்பு தான் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.

ஒவ்வொரு ஆடையை வடிவமைக்கும் போதும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாகத் தெளிவான விளக்கங்களை வடிவங்களில் அளித்து வருகிறோம், இதுவே மற்ற ஆடைகளுக்கும் தமிழ் ஆடைகளுக்கும் உரித்தான வித்தியாசம். இதற்கு காரணம் “தமிழ்” மொழி அல்ல நம் இனத்தின் கலாச்சாரத்தை முன்னிறுத்திய வாழ்வியல் கலை.

 

தமிழனின் சரித்திரங்கள் ஆடையில்:

உதாரணமாக நமது பொங்கல் சிறப்பு வரவான “தஞ்சை பெரிய கோவில்” ஆடையில் தன் நிழலை கூடக் கீழே விழாமல் பல ஆண்டுகளுக்கு மேல் தாங்கி நிற்கும் கோவிலின் 216 அடி கோபுரமும், அவ்வடிவத்தில் கல்வெட்டு எழுத்தினைப் போல் யாரும் பெரிதும் அறியாத தஞ்சை பெரிய கோவிலின் கட்டிடக்கலையின் சிறப்பும் அஃது கட்டப்பட்ட சரித்திரம் போன்றவை ஆடையில் பொறிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் உலகம் முழுதும் உள்ள மக்களின் பெரும்பான்மையானோருக்கு உலகின் கட்டடக்கலை உச்சமாக விளங்கும் “தஞ்சை பெரிய கோவில்” தமிழகத்தில் ராஜ ராஜ சோழன் எனும் தமிழ் மன்னனால் ஏழே ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது எனும் தகவலை உலகறியும்.

மேலும் இது போல் உள்ள வெளிவராத தமிழர் அதிசயங்கள் ஆடைகள் வழியே வெளி வரும் என்கின்றனர்.


தமிழில் உள்ள ஆடைகள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் கூறுகின்றனர். “ தரத்தில் சிறிய தவறு என்று அறிந்தால் உடனே மாற்றிக் கொடுத்து விடுவோம்”, “நமக்குப் பணத்தை விடத் தமிழ் மேல் பற்று உள்ள வாடிக்கையாளர்களின் மனமே முக்கியம்” என்கின்றனர்.

 

tamiltshirts.in என்ற இணையம்(Website) வழியாகக் குமரி முதல் இமயம் வரை:

தற்போது www.tamiltshirts.in என்ற இணையம்(Website) வழியாகக் குமரி முதல் இமயம் வரை ஆடைகள் டெலிவரி(delivery) செய்து வரும் இளம் தொழிலதிர்பர்கள், உலகம் முழுதும் தமிழையும் அதன் சிறப்புக்களையும் ஆடையாக, அணிகலனாக மேலும் நாம் மறந்த கலையாகக் கொண்டு சேர்ப்போம் எனப் பெரிய லட்சியத்தில் மிகுந்த துடிப்புடன் இயங்கி வருகிறார்கள்.

Facebook Page: www.facebook.com/vilvaclothings
Twitter Page: https://twitter.com/tamiltshirts
Google+ Page: https://plus.google.com/+tamiltshirts
Website URL: www.tamiltshirts.in

உங்களுடைய தொழில் பற்றி தமிழ் கைகள் இணையத்தளத்தில் பகிர:

tamilhands@gmail.com ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் அல்லது முகநூல் (www.facebook.com/tamilhands) மூலம் பகிருங்கள்.

தமிழனின் முயற்சியையும் வெற்றியையும் பகிர்வதில் தமிழ் கைகள் பெருமைப்படுகிறது.

 

Facebook Comments