உன் நினைப்பே உன் வெற்றியை தீர்மானிக்கும்

உன் நினைப்பே உன் வெற்றியை தீர்மானிக்கும்:

எப்போதும் நாம் நேர்முக சிந்தனையோடு, நமக்கு ஏற்படும் சோதனைகளையும் வேதனைகளையும் எளிதாக வெல்ல முடியும்.

இதுவரையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக அவர்களின் பிரச்சனைகளை  நேர்முக எண்ணத்தோடுதான் கையாண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

உன் நினைப்பே உன் வெற்றியை தீர்மானிக்கும்

 

நேர்முக எண்ணம் என்பது நம்மால் முடியும் என்று நாம் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் நம்மை ஊக்குவித்து கொள்வதாகும்.

ஒருவனுக்கு அவன் ஈடுபடும் அந்த காரியம் அவனுடைய பலமாக இருந்தாலும் என்னால் முடியும் என்ற நினைப்பு இல்லாமல் அவன் செய்வானானால் அவனால் அந்த காரியத்தில் வெற்றி காண முடியுமா என்பதை தீர்மானமாக சொல்ல முடியாது.

நாம் ஒன்றை ஆரம்பிக்கும் போதிலிருந்தே அதை அடையும் வரையில் என்னால் முடியும், என்னால் முடியும் என்று நினைத்து கொண்டு அந்த பணியை தொடரும்போது தான் அதனை நம்மால் நெருங்க முடியும்.

ஒருவனுக்கு என்னால் உறுதியாக ஜெய்க்க முடியும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருந்தால், உண்மையில் அவனுடைய வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து அவனால் எப்படி ஜெயிக்க முடியும் ?

உன் மூலைதான் உன் செயலை தீர்மானிக்கிறது, அந்த மூளைக்கு எப்போதும் நீ நேர்முக எண்ணத்தோடு(being positive) இருக்க கற்று கொடுக்க வேண்டும் அது உன்னை உண்மையில் உனக்கே தெரியாமல் வெற்றியாளனாக்கும்.

 

உங்களின் நேர்முக எண்ணத்தை (positive thinking) வளர்த்துக்கொள்ள சில வழிமுறைகள்:

  • என்னால் முடியுமா என்ற சந்தேகத்துடன் எந்த காரியத்திலும் இறங்காதீர்கள்.
  • எப்போதும் நேர்முக எண்ணத்தோடு இருங்கள்.
  • உங்களின் தோல்வியைப்பற்றி நிறைய யோசிக்காதீர்கள்.
  • நீங்கள் பேசும் வார்த்தைகளில் கூட நேர்முக எண்ணத்தை புகுத்துங்கள்.
  • நேர்முக எண்ணம் இருப்பவர்களிடம் மட்டும் பழகுங்கள்.
  • நீங்கள் ஒரு வெற்றியாளர் என்று உங்களின் மூளைக்கு நீங்கள் எப்போதும் சொல்லிக்கொண்டே இருங்கள்.
  • உங்களின் தோல்வியை உங்கள் மூளையில் இருந்து அழித்து எதிர்காலத்தில் வெற்றி பெற வேண்டியவற்றை பற்றி யோசியுங்கள்.
Facebook Comments