எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க 6 டிப்ஸ்

நேர்மறையானவர்களுக்கும் எதிர்மறையானவர்களுக்கும் இது தான் வித்தியாசம்.
நேர்மறையானவர்கள்: துன்பத்தில் அல்லது கஷ்டத்தில் வாய்ப்பை பார்ப்பவர்கள்.
எதிர்மறையானவர்கள்: வாய்ப்பிலும் துன்பத்தை அல்லது கஷ்டத்தை பார்ப்பவர்கள்.

 

எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க 6 டிப்ஸ்

 

எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க 6 டிப்ஸ்:

1. உங்களால் முடிந்ததில் கவனம் செலுத்துங்கள், உங்களால் முடியாததை பற்றி கவலை படுவதை தவிர்க்கவும்:

நாம் எப்போதுமே நமக்கு தெரிந்த அல்லது முடிந்த விசயத்தை விட நம்மால் முடியாத விசயத்தை பற்றி கவலை படுவது அதிகம்.

நம்மை உயர்த்தும் விஷயங்கள்

நீங்கள் எப்போதும் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க உங்களால் முடிந்ததில் அதிக கவனம் செலுத்துங்கள்,  மேலும் உங்களை முடியாத விஷத்தை பற்றி அதிகம் கவலை பட வேண்டாம்.

இந்த யுக்தி புரிந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்

உங்களால் முடியாத ஒன்று உண்மையில் உங்களுக்கு அதிகம் தேவை படுவதகோவோ அல்லது உங்களுக்கு அடிக்கடி கவலை தருவதாகவோ இருப்பின் நீங்கள் அதனை கற்று கொள்ள திட்டமிடலாம்.

 

2. நேர்மறையான தகவல்களை மட்டும் கேளுங்கள், படியுங்கள்:

நீங்கள் செய்யும் ஒரு வேலையின் முடிவு அதில் நீங்கள் எந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் இருந்தீர்கள் என்பதை பொறுத்து அமைகிறது.

தனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா?

உங்களின் வேலை ஈடுபாட்டை உங்களின் மூளை தீர்மானிக்கிறது. உங்களின் மூளையின் செயலை நீங்கள் அதிக நேரம் நேர்மறையாக அல்லது எப்போதும் எல்லா காரியத்திலும் நேர்மறையாக அணுகும் பட்சத்தில் உங்களால் மாற்றி அமைக்க முடியும்.

நீ நீயாக இரு !

ஆகவே நேர்மறையான தகவல்களை (சுகி சிவம் போன்றவர்களின் பேச்சு ஒரு சிறந்த உதாரணம்) மட்டும் கேட்கவும் படிக்கவும் பழகி கொள்ளுங்கள்.

 

3. நேர்மறையான மக்களுடன் அதிகம் இருங்கள் அல்லது அடிக்கடி இருக்க பாருங்கள்:

மேலே பார்த்ததை போல நீங்கள் எப்போதும் நேர்மறையான எண்ணத்தில் இருந்தாலும் கூட உங்களுடன் அதிக நேரம் இருப்பவர்கள் எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் என்றால் நீங்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பது சற்றே முடியாத காரியமாகிவிடும்.

இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்

ஆகவே முடிந்தால் உங்களுடன் இருப்பவர்களை எதிர்மறை எண்ணத்திலுருந்து நேர்மறை எண்ணத்திற்கு மற்ற பாருங்கள் அது உங்கள் வேலை இல்லை என்று நீங்கள் நினைப்பதாக இருந்தால் அவர்களை விட்டு சற்றே ஒதுங்கி விட பாருங்கள்.

 

4. உங்கள் தவறுகளில் இருந்து கற்று கொள்ள பழகுங்கள் :

நேர்மறையான எண்ணம் உடையவர்கள் எப்போதும் அவர்களின் தவறுகளில் இருந்து கற்று கொள்ளவும் அதனை திருத்தி கொள்ளவும் பார்ப்பார்கள்.

எல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்

இது அவர்களின் எதிர்மறை எண்ணம் மற்றும் சிந்தனை உருவாக்கத்தை தவிர்த்து அவர்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் ஆர்வமாகவும் இருக்கு உதவும்.

 

5. உங்கள் சாதனைகளை கொண்டாடுங்கள்:

எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்கள் அவர்களின் சாதனைகளை அல்லது அவர்கள் முடித்த வேலைகளை அதிகம் கொண்டாடுவார்கள்.

உலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்

அது சிறியதோ அல்லது பெரியதோ அவர்கள் அதனை கொண்டாட திட்ட மிடுவார்கள். இது அவர்களை தொடர்ந்து புத்துணர்ச்சியுடனும் சந்தோசமாகவும் இருக்கு செய்யும்.

 

6. எதையும் உங்களுடைய ஆதரவாளர்களுடன் செய்ய திட்டமிடுங்கள்:

யாராலும் இந்த உலகத்தில் எல்லா விஷயத்திலும் கண்டிப்பாக ஜொலிக்க முடியாது எனவே உங்களுக்கு யார் யார் எல்லாம் ஆதரவாகவும் உங்களுக்கு உதவ முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களுடன் சேர்ந்து உங்களுடைய திட்டத்தை அல்லது குறிக்கோளை நெருங்க முயற்சி செயுங்கள்.

இது உங்களுக்கு சுலபமாகவும் மேலும் உற்சாகமாகவும் இருக்க உதவும்.

 

நீங்கள் எப்படி உற்சாகமாக இருக்கிறீர்கள் என்பதை கீழே குறிப்பிடுங்கள்.

Facebook Comments