Blogging என்றால் என்ன?

Blogging என்றால் என்ன?

Blogging என்பது நீங்கள் சொந்தமாக ஒரு இணைய தளம் உருவாக்கி அதில் உங்களுக்கு நன்றாக தெரிந்த கருத்துக்களை வெளியிடுவது. எடுத்துக்காட்டாக, உங்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சுற்றுலாத்தலங்கள் பற்றியும் தெரியும் ஆனால் நீங்கள் சுற்றுலா தலங்கள் சம்மந்தப்பட்ட Blog உருவாக்கலாம்.

Blogging என்றால் என்ன?

 

 

 

Blog என்பதும் website என்பதும் வேறு வேறு கிடையாது Blog கூட ஒரு website தான் பொதுவாக ஒரு குறிப்பிட்ட தொகுப்பைப் பற்றி தொடர்ந்து வெளியிட்டு வருவதை Blog என்று அழைப்போம்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணையத்தளம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

புதிய இணையதளத்தை எப்படி உருவாக்குவது?

சமீபகாலமாக Blog என்பது ஒரு பகுதி நேர சம்பாத்தியத்திற்கு உதவும் ஒரு வழிமுறையாகும். ஆரம்ப காலத்தில் பகுதி நேரமாக தொடங்கி பிறகு முழுநேர வேலையாக மாற்றியவர்கள் நிறைய பேர்.

நீங்கள் ஒரு சொந்தமான இணையத்தளம் (blog) தொடங்க அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு 500 இலிருந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும்.

நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் ஒரு வெற்றிகரமான Blogger ஆகவேண்டுமெனில் தொடர்ந்து நீங்கள் தேர்வு செய்த தலைப்பில் அல்லது தொகுப்பில் ஒரு விஷயத்தை இணையதளத்தில் தொடர்ந்து போட்டு வர வேண்டும். காரணம் நிறைய பேர் மிக விருப்பமாக ஆரம்பத்தில் ஆரம்பித்தாலும், சரியான வழிமுறைகளை பின்பற்றாததால் தோல்வியடைந்தார்கள்.

நீங்கள் கீழ்கண்ட இந்த விதிகளை பின்பற்றாவிட்டால் உங்களுக்கும் தோல்விதான்:

  • நீங்கள் Blog செய்யும் விரும்பும் தொகுப்பில் ஏற்றார்போல் அதனுடைய வெப்சைட் பெயரை தேர்வு செய்யுங்கள்.
  • சரியான இடைவெளியில் தொடர்ந்து உங்கள் தொகுப்புகளை வெளியிடுங்கள்.
  • சரியான SEO (Search Engine Optimization) வழிமுறைகளை பின்பற்றுங்கள். (விரைவில் முழு தகவல்கள் )
  • பிறருடைய தொகுப்புகளை காப்பி செய்யாதீர்கள்.

இந்த தொகுப்பு Blog என்றால் என்ன என்பதை பற்றி புரியவைக்க வெளியிடுவதாகும் எனவே அதிகமான தகவல்கள் இனிவரும் தொகுப்பில் இன்னும் சிறந்த முறையில் விரிவாக விவரிக்க படும்.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

Facebook Comments