எல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்

எல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்:

இந்த உலகில் இதுவரை வெற்றி பெற்றவர்களிடம் வெவ்வேறு விதமான திறமை, பலம், ஆர்வம், முயற்சி, கடின உழைப்பு இருந்திருக்கும், ஆனால் அந்த அனைவரிடமும் இருந்த ஒரு ஒற்றுமையான விஷயம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதுதான் சுயக்கட்டுப்பாடு.

சுய கட்டுப்பாடு என்றால் என்ன?

சுய கட்டுப்பாடு என்பது சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டு விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, அவசியமாயின் கண்டிப்பாக எவ்வளவு கஷ்டப்பட்டாவது செய்வதே ஆகும்.

எல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்

 

சுய கட்டுப்பாடு இல்லாதவன் – இருப்பவன் (சிறு கதை) :

ஒரு ஊரில் சுகுமாரும், பாலுவும் நல்ல நண்பர்கள். அவர்கள் இருவரும் தங்களுடைய உடல் எடையை குறைக்க திட்டமிட்டனர்.

இருவரும் காலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தார்கள், இப்படியே ஐந்து நாட்கள் சென்றது. ஆறாவது நாள் சுகுமார், என்னால் இன்று எழுந்து கொள்ள முடியவில்லை இன்று நீ மட்டும் உடற்பயிற்சி செய் என்று சொல்ல, பாலுவும் தன்னுடைய திட்டத்தின் வழி உடற் பயிற்சியை மேற்கொண்டே வந்தான்.

இது இருந்தால் உங்களை வெற்றி தேடும்

இப்படியாக இந்தத் திட்டம் சென்று கொண்டிருக்கையில், பாலுவின் உடல் எடையில் நல்ல மாறுதல் தெரிந்தது, அதேநேரம் சுகுமாரின் உடல் எடையில் பெரிய மாற்றம் இல்லை.

இந்த சிறு கதையின் மூலம், நீங்கள் கட்டுப்பாடு என்றால் என்ன என்பதை அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன், எளிதாக சொல்ல வேண்டுமானால் பாலுவால் முடிந்தாலும் முடியவில்லை என்றாலும், உடற்பயிற்சி நம் இலக்கை அடைய தேவை, எனவே அதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து செய்ததன் பலனாக அவனால் உடல் எடையை குறைக்க முடிந்தது, ஆனால் சுகுமார் திட்டமிட்ட தோடு அதை சரியாக அவனுடைய சொந்த விருப்பு வெறுப்பின் காரணமாக நடத்தாததால் அவனால் அவனுடைய நோக்கத்தை அடைய முடியவில்லை.

நாம் அனைவரும் நம்முடைய சுய கட்டுப்பாட்டை கண்டிப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அனைவரும் நல்ல திட்டமிடுகிறார்கள், ஆனால் நடைமுறைப்படுத்துவதில் சுய கட்டுப்பாடு இல்லாததால் தோல்வியைத் தழுவுகிறார்கள்.

நீங்களும் சுயகட்டுப்பாட்டை வளர்த்து வாழ்வில் வெற்றி பெற தமிழ் கைகள் உங்களை வாழ்த்துகிறது.

 

 

Facebook Comments